தனது வழி தனி வழி என்றும் தனித்துதான் போட்டியிடுவதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக போடி வருகை தந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கூட்டணி பற்றி இனி தன்னிடம் கேட்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.